இப்படியும் இருக்குது இந்தியா..

             

   slum dog millionaire படம் பார்த்து விட்டு, அதிகக் கோபப்பட்டவர்களில் அடியேனும் ஒருவன். "இவ்வளவுக் கேவலமாக இந்தியா இல்லை.  இது எல்லாம் பழையக் கதை இவர்களுக்கு நமது நாட்டைக் கேவலமாகச் சித்தரிப்பதைத் தவிர வேறு வேலை கிடையாது", என்று. ஆனால் சில இடங்களில்இந்தியா மோசமான நிலையில்தான் இருக்கிறது. முக்கியமாக வட இந்தியாவில்,

 1 )  பேருந்துகளின்  மேற்கூரையில் பயணம் செய்வது இங்கு வழக்கமான விஷயம். இது தமிழ்நாட்டிலும் உண்டுதானே? என்றுக் கூறலாம்.., ஆனால் நான் பார்த்த வரையில் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. சிற்றுந்துகளும்,  ஷேர் ஆட்டோக்களும் வந்தப் பிறகு கூரையில் பயணம் செய்வது இல்லை. ( சில்லறை மீதம் ஐம்பது பைசாவை எக்காரணம்  கொண்டும்  தர மாட்டார்கள் தவிர சேவை..??  பரவாயில்லை.) ஆனால் இங்கு மேற்கூரை அமரக் கூட இடமில்லாமல் நிறைந்து விடுகிறது. மேலும் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்தால் பயணச்சீட்டுக் கட்டணம் சிறிது குறைவு என்பதும் ஒரு விஷயம்.

2 ) தில்லியின் புறநகர்ப் பகுதிகளில்  காலை நேர மின்சார ரயில்களில்   பயணிப்பவர்களை நீங்கள் பார்க்க வேண்டும். இரண்டுப் பெட்டிகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில்  நின்று கொண்டு கூடப் பயணிக்கிறார்கள். அவர்கள் தவறி விழுந்தால் காப்பாற்ற வேண்டும் என்று பதட்டமடைய வேண்டியதே இல்லை. மும்பையிலும் கூட்ட நெரிசல் அதிகம் உண்டு.




3 ) சாலையோர முடி திருத்தகங்கள். முதன்மைச் சாலைகளின் நடை பாதை ஓரத்தில் ஒரு நாற்காலி, எதிரே ஒரு கண்ணாடி.. இவ்வளவுதான். இது கடை. 

4 ) ரிக்சா வண்டிகள். மனிதர்களை வைத்து பணத்துக்காக  மனிதர்கள் மிதித்து செல்லும் ரிக்சா வண்டிகள்.



5 ) உலகின் கற்ப்பழிப்புத் தலைநகரம் தில்லி என்று எங்கோப் படித்ததாக நினைவு. அருகிலுள்ள மாவட்டங்கள் ஏதாவது ஒன்றில், தினமும் ஒரு பதின்ம வயது சிறுமி கற்பழிக்கப் பட்டதாக, அல்லது வரதட்சிணை மற்றும் சந்தேகம் காரணமாக மனைவி கொலை செய்யப் பட்டதாகச்  செய்தியைப்  பார்க்கலாம். 

6 ) சில மாவட்டங்களில் பேருந்துகள் புராதன சின்னமாகப் பாதுகாக்கலாம் என்கிற அளவுக்குப் பழையவை. 

7 ) இங்குப் புகையிலை பயன்பாடு மிக அதிகம் என்றேத் தோன்றுகிறது. மிக நன்றாகப் படித்தவர்கள் கூட நடைப்  பாதையில் கிடைக்கும் புகையிலையை வாங்கி வாயில் அடக்கிக் கொள்கிறார்கள்.  புகையிலை அல்லதுப் பாக்கு கொட்டி, அதை  சுண்ணாம்புடன் சேர்த்து நன்றாக இடது  உள்ளங்கையில் வைத்துத் தேய்த்து, வலது கையால் அதை தட்டி அடர்த்திக் குறைந்த துகள்களை ஊதி விட்டு அடைர்த்தியானவற்றை கீழுதட்டின் உள்பகுதியில் அடக்கிக் கொள்ளுகிறார்கள் . ( தமிழ்நாட்டில் Hans புகையிலை உபயோகிப்பவர்கள்  இதுபோல செய்வார்கள்) 

8) போதை வஸ்துக்கள் எளிதில் கிடைக்கின்றன  என்பதாகக் கேள்வி.அதிக அளவில் போதை தரும் பாங்கு எனப்படும் ஒன்றை ( அன்பே சிவம் படத்தில் மாதவன் சாப்பிடுவதாகக் காண்பிக்கப் படும்) திரவமாகக் குடிக்கத்  தரும் கடைகள் நிறைய உண்டு. 

9 ) ஒரு காவலர் (போலீஸ்) வழியில் நின்று கொண்டிருந்த ஒரு  பெண்ணை தனது இரு சக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏறச் செய்து கற்பழிக்க அழைத்துச் சென்றதாக ஒரு சம்பவம் குறித்துப் படிக்க நேர்ந்தது. நல்ல வேளையாக அந்த வண்டி சென்ற வழியில் இருந்த கிராம மக்கள் அந்தப் பெண்ணின் அழுகுரல் கேட்டு வண்டியை மறித்து காவலரை மிரட்டி வாய்ச்சண்டையிட்டு இருக்கிறார்கள். அந்த வேளையில் அந்தப் பெண் அங்கிருந்துத் தப்பி விட்டார். 14  வயது சிறுமியை பல காவலர்கள் ஒன்றாகக் கற்பழித்துக் காவல் நிலையத்திலேயேக் கொலை செய்த   சம்பவம் பதற வைத்தது.  (எல்லா மாநிலங்களிலும் காவல் துறை ஒரே மாதிரிதான் இருக்குமோ..?)

10 ) வறுமையின் காரணமாகப் பாலியல் தொழில் புரிவோர் மும்பை, தில்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் மிக அதிகம்.


  அப்புறம்..,  இந்தியாவின் பொதுவான விஷயங்கள் இங்கும் உண்டு. பெரிய பதிவியில் இருப்பவர்களைப் பார்த்து கூழைக் கும்பிடுப் போடுவது, சற்று கீழே இருப்பவர்களை எந்த அளவுக்கு அடக்கி வைக்க வேண்டுமோ அடக்கி வைக்க முயற்சிப்பது , (சேத்தன் பகத் ஒரு கட்டுரையில், இதனை ஆங்கில வார்த்தைகளில் மிகக் கேவலமாக எழுதி இருந்தார்)

   சாக்கடையின் அருகிலேயே  உள்ள வசிப்பிடங்கள்..,  

  எதாவது சுவற்றின் மூலையில் சிறுநீர் கழிப்பது, பாக்குப் போட்டு எச்சில் துப்புவது போன்றவை.

  வட இந்தியாவில் இருந்துத் தென்னிந்தியாவிற்கு வருபவருக்கு ஒருவேளை இது போன்ற ஒரு பட்டியல் தென்படுமோ என்னவோ?

 வெளிநாட்டில் பணி புரியும் எனது நண்பரை அவரது   சக பணியாளர் ஆச்சர்யமாகக் கேட்டு இருக்கிறார்... " எப்படி உங்களால் பயமில்லாமல் ரயில் கூரை மீது ஏறி பயணிக்க முடிகிறது என்று?" "நான் பார்த்த வரையில் அப்படி இல்லவே இல்லை" என்று மறுத்திருக்கிறார் தமிழகத்தைத் தாண்டிப் பயணித்திராத நண்பர். 
  இன்னும் ஒருவர் "திருமணம் செய்துக் கொள்ள பெண் வீட்டில் இருந்து வரதட்சிணை என்று அதிகப் பணம் மற்றும் நகை வாங்குவீர்களாமே  அது எதற்கு? அதற்கு இணையாக மணமகன் வீட்டில் பெண் வீட்டிற்கு என்னத் தருவீர்கள்?" என்றும் கேட்டு இருக்கிறார்.

 மற்றொரு சமயம் "உங்கள் வீட்டில் உங்களுடன்   பிறந்தவர்கள் 10 , 15   பேர் இருப்பார்களே" "இந்தியாவில் தொழிற்சாலைகள் கூட இருக்கிறதா?" என்றெல்லாம் ஆச்சர்யமாகக் கேட்டு இருக்கிறார்கள். 

      நமது நாட்டை பற்றிய, மற்ற நாட்டவர்களின் எண்ணம் சில நாடுகளில் இப்படி இருக்கிறது. இந்தியாவின் வறிய, பரிதாபமான  முகத்தை மாற்ற யார் வருவார்? இந்தியர்  என்றால் அனைவரும் மதிக்கும் நிலை எப்போது ஏற்படும்? 


Comments

  1. நலமா ?

    இப்படி அருமையாக எழுதுற நீங்க ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை...?!

    வேலை பளு என்று காரணம் சொல்லகூடாது. :)

    கிடைக்கும் கொஞ்ச நேரத்தை எழுதுவதற்கு கொடுத்தால் எங்களுக்கு யதார்த்தமான நல்ல பதிவுகள் கிடைக்கும்...

    தொடர்ந்து எழுதுவீங்க என்று நம்புகிறேன்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வட மாநிலத்தைப் பற்றி சொல்லியிருப்பது எல்லாம் சரியே.இன்னமும் பேருந்துகளின் மேற்கூரையில் பயணிப்பதை இங்கு காணலாம்.

    ReplyDelete
  3. முறையான கல்வி... [இப்பொழுது கிடைப்பது போல் அல்ல]
    வியர்வைக்கு ஏற்ற கூலி... [அப்படின்னா?]
    தன உலகம் என்ற சுயநலம் வரும் வரை உங்கள் கனவு கனாவாகவே இருக்கம்...
    இவைகள் வருவதற்கு பொருமினாள் மட்டும் போதாது,
    மொக்கை பதிவுகளுக்கு மத்தியில் பொருமும் பதிவுகளும் இட வேண்டும்...

    ReplyDelete
  4. நன்றி கவுசல்யா அக்கா..., நான் மிகவும் நலம். தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..

    ReplyDelete
  5. நன்றி suryajeeva Sir . எனது அடுத்தப் பதிவுகள் பெரும்பாலும் நாட்டு நலன் பற்றியதாகவே இருக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :